மதுரை யூடியூபர் வீரமணியை குறிப்பிட்டு கேரளம் காவல்துறை விழிப்புணர்வு பதிவு

வீரமணியின் புகைப்படத்தை குறிப்பிட்டு கேரளம் காவல்துறை ஒரு விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது.
யூடியூபர் வீரமணி
Published on: 

திருவனந்தபுரம்,

மதுரையை சேர்ந்த யூடியூபர் வீரமணி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தன்னை பின்தொடர்பவர்கள் தனக்கு இனிப்புகளை (ஸ்வீட் பாக்ஸ்) அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி தனது வீட்டின் முகவரியையும், செல்போன் எண் ணையும் பொதுவெளியில் வெளியிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட நெட்டி சன்கள் விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், செல்போன் உள்ளிட்ட பொருட்களை 'கேஷ் ஆன் டெலிவரி' மூலம் அவரது முகவரிக்கு ஆர்டர் செய்தனர்.

பொருட்கள் குவிந்துகொண்டே இருந்தால் அதனை பெறமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி வீட்டை பூட்டி விட்டு வேறு மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாக தக வல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வீரமணியின் புகைப்படத்தை குறிப்பிட்டு கேரளம் காவல்துறை ஒரு விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், "சமூக ஊடகங்களில் உள்ள நகைச்சுவைகள் மற்றும் டிரெண்டுகளில் நாம் மூழ்கிவிடும்போது, நமது சொந்த பாதுகாப்பை பற்றி மறந்து விடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com