கேரளாவிற்கு 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்

கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் கூறி உள்ளார்.
கேரளாவிற்கு 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்
Published on

சென்னை

சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவிற்கு அதிகபட்ச நிவாரணம் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்பட்டுள்ளன. 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 306 டன் அரிசி, 230 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பிவிட்டோம். ரூ.2.11 கோடி மதிப்பள்ள மருந்துகள் மற்றும் பொருட்களை அனுப்பி உள்ளோம்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் 226 மருத்துவ முகாம்களை அமைத்து உதவி வருகிறோம்

என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com