கேரள மாநில அ.தி.மு.க. செயலாளர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்


கேரள மாநில அ.தி.மு.க. செயலாளர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x

கேரள மாநில அ.தி.மு.க. செயலாளர் ஜி.சோபகுமார் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

சென்னை

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

கேரள மாநில அ.தி.மு.க. செயலாளர் ஜி.சோபகுமார் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு திறம்பட கட்சிப் பணியாற்றி வந்த சோபகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story