இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்

பர்கூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்டதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்
Published on

பர்கூர்

பர்கூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பர்கூர் போலீசில் புகார் செய்தனர். அதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த கோபி (27) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com