2 சிறுமிகள் கடத்தல்

ஓசூர், பாகலூரில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 சிறுமிகள் கடத்தல்
Published on

ஓசூர்

ஓசூர், பாகலூரில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 வயது சிறுமி

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பாகலூர் அருகில் தங்கி, ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் பாகலூரை சேர்ந்த நந்து (வயது 20) என்ற வாலிபர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை

அதேபோல், ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார்செய்தனர். அதில் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த முரளி (23) என்ற வாலிபர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த 2 புகார்கள் குறித்தும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com