காதல் திருமணம் செய்த பெண் வீடுபுகுந்து கடத்தல்

காதல் திருமணம் செய்த பெண் வீடு புகுந்து கடத்தப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் தாய் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காதல் திருமணம் செய்த பெண் வீடுபுகுந்து கடத்தல்
Published on

காதல் திருமணம் செய்த பெண் வீடு புகுந்து கடத்தப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் தாய் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காதல் திருமணம்

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 25). தனியார் பஸ் கண்டக்டர். இவரும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த உறவினரான 19 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல்ஜோடி இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அந்த பெண் காளிதாஸ் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்ணின் தாய், தாத்தா, தம்பி உள்பட 9 பேர் சேர்ந்து கார், மோட்டார் சைக்கிள்களில் பனைக்குளம் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென காளிதாசின் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை கடத்தி சென்றனர்.

கடத்தல்

இதை தடுக்க வந்த காளிதாசின் தாய் திலகவதியையும்(50) கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதுகுறித்து திலகவதி திருஉத்தரகோசமங்கை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மேற்கண்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அப்பெண் அருப்புக்கோட்டை பகுதியில் உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com