சிறுமி கடத்தல்; போலீசார் விசாரணை

சிறுமி கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறுமி கடத்தல்; போலீசார் விசாரணை
Published on

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் சிறுமி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை அக்கம்பக்கத்திலும், பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பாட்டி திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் சிவமூர்த்தி (வயது 26) என்ற வாலிபர் தங்கள் பேத்தியை கடத்தி சென்றிருக்கலாம் எனக்கூறியுள்ளார். அதன்பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com