சாலையில் நடந்து சென்றவர் மொபட் மோதி பலி

பரமத்திவேலூர் அருகே சாலையில் நடந்து சென்றவர் மொபட் மோதி பரிதாபமாக இறந்தார்.
சாலையில் நடந்து சென்றவர் மொபட் மோதி பலி
Published on

பரமத்திவேலூர்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சாலாட்டி, அணைக்காட்டை பகுதியை சேர்ந்தவர் சித்தன் (எ) சுப்பிரமணி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் மயில் என்பவரது காட்டில் முள்ளு வெட்டும் வேலைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்து விட்டு மாணிக்கம்பாளையத்தில் இருந்து நல்லக்குமாரசாமி கிராமத்திற்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மொபட் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுப்ரமணி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com