பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

பரமத்திவேலூரில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக இறந்தார்.
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மோட்டார் சைக்கிள் மோதி பலி
Published on

பரமத்திவேலூர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் காவடி எடுத்து கொண்டு பழனிக்கு செல்ல பரமத்திவேலூர் வந்துள்ளார். இந்தநிலையில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சண்முகத்திற்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம் மீது மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்படுத்திய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com