சிறுமலர் பள்ளி அணி வெற்றி

சேலம் மாவட்ட ஆக்கி போட்டியில் சிறுமலர் பள்ளி அணி வெற்றி பெற்றது.
சிறுமலர் பள்ளி அணி வெற்றி
Published on

சேலம்:

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டு மோதின. இறுதி போட்டிக்கு சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணியும், பிளாக்ஸ்டிக் அணியும் தகுதி பெற்றன. முடிவில் சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணி 8-6 என்ற கோல் கணக்கில் பிளாக் ஸ்டிக் அணியை வீழ்த்தியது. முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு சேலம் மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் கோப்பைகளை வழங்கினர். மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசை வென்றதன் மூலம் அடுத்த மாதம் ஈரோட்டில் நடைபெறும் மண்டல அளவிலான ஆக்கி போட்டிக்கு சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com