மன்னர் சரபோஜி 246-வது பிறந்த நாள் விழா

தஞ்சையில் மன்னர் சரபோஜியின் 246-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.
மன்னர் சரபோஜி 246-வது பிறந்த நாள் விழா
Published on

தஞ்சையில் மன்னர் சரபோஜியின் 246-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.

மன்னர் சரபோஜி பிறந்த நாள்

மன்னர் சரபோஜியின் 246-வது ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தஞ்சை அரண்மனை வளாகக் கலைக்கூடத்தில் உள்ள மன்னர் சரபோஜி சிலைக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் பால தண்டாயுதபாணி, நூலக ஆளுமைக் குழு ஆயுள் கால உறுப்பினர் து. சிவாஜி ராஜா போன்ஸ்லே, நூலகர் சுதர்சன், தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மன்னர் சரபோஜியின் 246-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் சரசுவதி மகால் நூலகம் வெளியிடும் நூல்களுக்கு சிறப்பு சலுகையாக 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பு வெளியிடப்பட்ட நூல்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், அதற்கு பிறகு வெளிவந்த நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கி விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பன்மொழி இலக்கிய, இலக்கண நூல்களையும், கோவில் கலை, ஜோதிடம், மருத்துவம், நாட்டியம், இசை, நாடகம், கணிதம், வாஸ்து போன்ற பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் வாங்கி பயன்பெறலாம் என கலெக்டர் தீபக்ஜேக்கப்கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com