கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா நடந்தது.
கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் மற்றும் செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் விழா நடந்தது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க துணைத் தலைவரும், செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளருமான அனுசுயா மாரிமுத்து தலைமை தாங்கினார். அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், பொருளாளர் குருநாதன், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், என்.கே.எஸ்.டி. சுப்பிரமணியன், முப்புடாதி முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருமுருக கிருபானந்த வாரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் மாரிச்சாமி, செல்வராஜ், ராஜாஆறுமுகம், புஷ்பம், முத்துமாரிபிரகாஷ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், மாரிச்சாமி, முத்துலட்சுமி, தி.மு.க. நகர நிர்வாகிகள் மாரிசாமி, பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், இந்து முன்னணி நிர்வாகி ஆறுமுகசாமி, செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், சுப்பிரமணியன், முத்தையா, சுப்பிரமணியன், சிவராமன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செங்குந்தர் முன்னேற்ற சங்க தலைவர் கந்தவேல், செயலாளர் செல்வ கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com