கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சேலம்- சென்னை புறவழிச்சாலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் புறவழிச்சாலையில் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com