கொடைக்கானல்: சுற்றுலா தலங்களில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

விபத்தில் ஓட்டுநர் உட்பட வாகனத்தில் இருந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.
கொடைக்கானல்: சுற்றுலா தலங்களில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
Published on: 

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் பாம்பார்புரம் பகுதியில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட வாகனத்தில் இருந்த 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X