கொடைக்கானலில் இன்று சுற்றுலாத்தலங்களுக்கான நுழைவு கட்டணம் ரத்து

கொடைக்கானலில் இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலாத்தலங்களுக்கான நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கொடைக்கானலில் இன்று சுற்றுலாத்தலங்களுக்கான நுழைவு கட்டணம் ரத்து
Published on

கொடைக்கானல், 

வன உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வன உயிரின வாரம் 1952 ஆம் ஆண்டு முதல்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 2-ம் தேதி முதல் இன்று 8-ம் தேதி வரை கடை பிடிக்கப்படுகிறது.

இந்த விழிப்புணர்வு வாரம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே இந்த விழிப்புணர்வு வாரத்தின் கடைசி நாளான இன்று கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது என்று வனத்துறை அறிவித்து உள்ளது.

அதன்படி மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com