கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையம் மற்றும் பேரிஜம் ஏரி இன்று மூடல் - வனத்துறை

கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையம் மற்றும் பேரிஜம் ஏரி இன்று மூடல் - வனத்துறை
Published on

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கானலில் நிலவும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு குவிந்து வருகின்றனர்.

கொடைக்கானல் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மன்னவனூர் கிராமத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக, கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையம் மற்றும் பேரிஜம் ஏரி இன்று (ஜன.7) மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் செல்லத் தற்காலிக தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com