

கொடைக்கானல்,
தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் திண்டுக்கல், கொடைக்கானல் வழியாக கேரளாவுக்கு நகர்ந்து சென்றது. குறிப்பாக திண்டுக்கல், கொடைக்கானலை கஜா புயல் புரட்டி போட்டது. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.
மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இன்னும் 3 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இடத்தில், புயல் தாக்கியபோது கார் மீது மரம் விழுந்து கேரள பெண் நீமிலா (வயது 25) என்பவர் இறந்து போனார்.
இந்த சோகம் அடங்குவதற்குள் கொடைக்கானலில் மண்சரிவில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-