முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருந்த குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் கைது..!

திண்டுக்கல் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை போலீஸ் தடையை மீறி சந்திக்க முயன்ற குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர்.
முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருந்த குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் கைது..!
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், குடகனாறில் முறையாக தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பது சம்பந்தமான தமிழக அரசின் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் வல்லுநர் குழு அறிக்கை அளிக்கவில்லை.

இது குறித்து தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்டிகையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க அனுமதிக்கவேண்டும், என்று கடந்த 21ம் தேதியன்று மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் குடகனாறு பாதுகாப்பு சஙகத்தலைவர் ராமசாமி தலைமையில் மனு அளித்திருந்தனர்.

ஆனால் முதல் அமைச்சரை சந்திக்க அனுமதியளிக்கவில்லை. இதனால் போலீஸ் தடையை மீறி குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் விவசாயிகள் முதல்-அமைச்சரை சென்று சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் இருந்து திண்டுக்கலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக புறப்பட்ட குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் ராமசாமியை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கூம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com