கொடநாடு விவகாரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொடநாடு விவகாரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கடந்த 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று கூடவுள்ளது. இதில், துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடக்கிறது.

இதற்கிடையில், கொடநாடு விவகாரம் பற்றி காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில், அவையில் எழுப்ப வேண்டிய தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com