கொடநாடு விவகாரம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

கொடநாடு விவகாரம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Published on

சென்னை

சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்ததும் அவர் பேச தொடங்கினார்.

கொடநாடு விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்' என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் போலீசார் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று எதிரொலித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com