கொடநாடு கொலை விவகாரம்; யாரையும் பழிவாங்கும் அவசியமில்லை - கனிமொழி எம்.பி. பேட்டி

கொடநாடு விவகாரத்தில் மடியில் கனம் இருந்தால் அதிமுகவினருக்கு பயம் இருக்கலாம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை விவகாரம்; யாரையும் பழிவாங்கும் அவசியமில்லை - கனிமொழி எம்.பி. பேட்டி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கனிமொழியிடம் கொடநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கொடநாடு கொலை வழக்கு விவகாரம் அதிமுக ஆட்சி காலத்திலேயே பத்திரிக்கையாளர்களால் வெளியே கொண்டு வரப்பட்டது. இதில் திமுக யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு பழிவாங்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் தனது கடமையைச் செய்யும். மடியில் கனம் இருந்தால் அதிமுகவினருக்கு பயம் இருக்கலாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com