கொடநாடு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது

கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடமும், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இது தெடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன்னர் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கெடநாடு வழக்கில் தெடர்புடைய கனகராஜ் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபேது கார் மேதி மர்மமான முறையில் இறந்தார். கனகராஜின் மரணம் விபத்து அல்ல, கொலை என காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com