கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்தனர்.
கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Published on

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் மகிழ்ச்சியாக குளித்து செல்வார்கள்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொடிவேரி அணையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தற்போது பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொடிவேரி அணையில் தண்ணீரானது ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com