“5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது” - முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கவே மாட்டோம் என்று முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் உறுதி அளித்தார்.
“5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது” - முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
Published on

சென்னை,

சட்டசபை நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் தயவால் தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுகவின் தயவால் தவெக ஆட்சி நடைபெறவில்லை. சோபா மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். சோபா மாடல் என்றால் என்னவென்று புரியவே ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஷோபா செட், பர்னிச்சர் பிஸினஸ் எல்லாம் வெளியே பண்ணுங்கள். சட்டசபையில் வேண்டாம்.

தவெக ஆட்சியில் பட்டியலினத்தவர் 8 பேருக்கு அமைச்சர் பதவி. ஊழலில் ஊறிப்போனவர்கள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தர மாட்டார்கள். கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை. மக்கள் பணத்தை தொடமாட்டோம். தொடவிட மாட்டோம். மக்கள் பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது. பேசுங்க... பேசுங்க.. என்றால் நான் என்ன பேசுவது.

தற்போதைய மத்திய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் நேரெதிராக நிற்பவர்கள்தான் நாம். அதே சமயம், எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்புகிறவர்கள் நாம் அல்ல. நமக்கு எப்போதுமே தமிழகத்தின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம். அதற்காக மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கவே மாட்டோம். மக்களுக்கோ, சிறுபான்மை சகோதரர்களுக்கோ, நம் ஆதரவு இயக்கங்களுக்கோ எந்த சந்தேகமும் வேண்டாம். நாம் யாரின் டீமும் இல்லை. நாம் Pure ஆன People's Team. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com