கொல்லிமலையில்`குளுகுளு' சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொல்லிமலையில்`குளுகுளு' சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Published on

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கொல்லிமலை சோளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அங்குள்ள பிரதான சாலையில் எதிரே வாகனங்கள் வருவது தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றதை காணமுடிந்தது.

இதற்கிடையே கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று நிலவிய `குளுகுளு' சீசனால் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் அருவிகளில் நீர்வரத்து இல்லாததால் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கடும் குளிரால் சாலையோர கடைகள், உணவகங்களில் விற்பனை களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com