கொல்லிமலை: சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள் அகற்றம்


கொல்லிமலை: சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள் அகற்றம்
x

சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகளை அதிகாரிகள் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

சேந்தமங்கலம்,

கொல்லிமலையில் உள்ள ஆலத்தூர்நாடு தேனூர்பட்டியிலிருந்து சேரடி கிராமம் வழியாக தம்மம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. கொல்லிமலையின் 2-வது மாற்றுப்பாதையாக திகழும் இந்த பகுதியில் ஆலத்தூர் நாடு, குண்டூர் நாடு, குண்டனி நாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தேனூர்பட்டியில் இருந்து வேலிக்காடு செல்லும் சாலையை ஆக்கிரமித்தவாறு செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடந்தது. அதன் வழியாக பஸ், கார்கள் சென்று வரும்போது எதிர்பாராமல் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இது குறித்து ‘தினத்தந்தி'யில் 4-ந்தேதி படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதையடுத்து சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகளை அதிகாரிகள் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இதை அறிந்த மலைவாழ் மக்கள் பிரச்சினை குறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்தனர்.

1 More update

Next Story