கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் - போலீசார் விசாரணை

இறந்து கிடந்தவர் அருகில் விஷ பாட்டிலும், மோட்டார் சைக்கிளும் இருந்தன.
கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் - போலீசார் விசாரணை
Published on

கொல்லிமலை,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் 1-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வனத்துறை சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் அருகில் விஷ பாட்டிலும், மோட்டார் சைக்கிளும் இருந்தன. மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ஓட்டுனர் உரிம அட்டையை கைப்பற்றினர். பின்னர் சாலையோரம் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வலப்பூர் நாடு ஊராட்சி ஈராங்குலிபட்டியை சேர்ந்த பழனிசாமி என்பதும், இவருக்கு சுமதி (42) என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர் என்பது தெரியவந்தது. பழனிசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொண்டை ஊசி வளைவு சாலையோரத்தில் டிரைவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com