கரூரில் கொங்கு ஒயிலாட்டம் கோலாகலம்

கரூரில் கோலகலமாக கொங்கு ஒயிலாட்டம் நடைபெற்றது.
கரூரில் கொங்கு ஒயிலாட்டம் கோலாகலம்
Published on

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிப்பட்டி பிரிவு அருகில் அமைந்துள்ள மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. அருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கோவில் வளாகத்தில் இருந்து முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 1,200 பெண்கள் மற்றும் சிறுமியர் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து ஒயிலாட்டம் ஆடினர். மேலும் 300 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வேட்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் ஆடினர். 1,500 பேர் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி கொங்கு ஒயிலாட்ட பாரம்பரிய பாடல்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com