இணையதளத்தில் திடீரென டிரெண்ட் ஆன கூமாபட்டி கிராமம்: கூகுளில் வழிதேடும் இளைஞர்கள்

இணையத்தில் கடந்த சில நாட்களாக கூமாபட்டி கிராமம் டிரெண்ட் ஆகி வருகிறது.
இணையதளத்தில் திடீரென டிரெண்ட் ஆன கூமாபட்டி கிராமம்: கூகுளில் வழிதேடும் இளைஞர்கள்
Published on

இணையத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிவிடுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக இன்ஸ்டகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களை திறந்தாலே... ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என்று பரவும் வீடியோக்கள்தான் பார்க்க முடிகிறது. இதனால், ஒரே நாளில் அகில உலக பேமஸ் ஆகிவிட்டது கூமாபட்டி.

இணையத்தில் வைரல் ஆகும் இந்த வீடியோவில் பேசும் நபர் ஒருவர், " யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தாலும் சரி, மன உளைச்சல் இருந்தாலும் சரி அதை சரி பண்ண இந்த கூமாபட்டிக்கு வாங்க, இந்த கூமாப்பட்டி ஒரு தனி தீவு, இது ஒரு ஐலேண்டு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கூமாப்பட்டியில் அதிக அளவிலான இயற்கை சார்ந்த இடங்கள் உள்ளது என்று பேசியிருந்தார். அந்த வீடியோவில் கூமாபட்டியை சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் காட்டியிருந்தார்.

இணையத்தில் வீடியோ வைரல் ஆன நிலையில்,  இளைஞர்கள் பலரும் கூமாபட்டி எங்கே இருக்கிறது என அந்த ஊருக்கு வழி  தேட ஆரம்பித்துவிட்டனர். இதனால், கூமாபட்டி என்ற கிராமம் இணைய தேடுதலில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால், அந்த கூமாபட்டி கிராமம் தமிழக அளவில் மிகவும் பேசும் பெருளாகவும் மாறி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com