ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 605 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். இதில முதல் தரமாக 338 மூட்டைகளும், 2-வது தரமாக 267 மூட்டைகளும் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன.

பொது ஏலத்தில் தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.70.50 முதல் ரூ.78.78 வரையும், 2-வது ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.48.39 முதல் ரூ.68.25 வரையும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட 112 மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்ததால் கிலோவிற்கு ரூ.2 வரை விலை குறைந்து காணப்பட்டது.

இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com