ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 94 விவசாயிகள் 600 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரள மாநிலத்தை சேர்ந்த 9 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் 318 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோவுக்கு 76 ரூபாய் 50 காசுகள் முதல் 85 ரூபாய் 75 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. 282 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோவுக்கு 66 ரூபாய் முதல் 74 ரூபாய் 50 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட 115 மூட்டை கொப்பரை குறைந்துள்ளது என்று ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com