ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 85 விவசாயிகள் 453 மூட்டைகளின் கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். 242 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 75 ரூபாய் 70 காசுகள் முதல் 81 ரூபாய் 85 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது

211 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்று 54 ரூபாய் முதல் 73 ரூபாய் 50 காசுகள் ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் தேவை அதிகரிப்பால் கிலோவுக்கு 70 காசு விலை அதிகரித்தது. கடந்த வாரத்தை விட 93 மூட்டைகள் அதிகம் ஆகும். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்

X

Daily Thanthi
www.dailythanthi.com