ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 83 விவசாயிகள் 443 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். இதில் முதல் ரக கொப்பரையாக 285 மூட்டைகளும், 2-வது ரகமாக 158 மூட்டைகளும் தரம் பிரிக்கப்பட்டன. ஏலத்தில் தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.78 முதல் 81 ரூபாய் 50 காசுகள் வரை ஏலம் போனது. 2-வது ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.60 முதல் ரூ.76 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் கொப்பரை தேங்காய் வரத்து அதிகமானதால், கொப்பரை விலை கடந்த வாரத்தை விட 1 ரூபாய் 60 காசுகள் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com