கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 79 விவசாயிகள் 474 மூட்டை கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடந்தது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தை சேர்ந்த 11 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்துகொண்டனர். இதில் 250 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோவுக்கு ரூ.72.76 முதல் ரூ.78.60 வரை ஏலம் போனது. 224 மூட்டை இரண்டாம் ரக கொப்பரை கிலோவுக்கு ரூ.44.26 முதல் ரூ.68.73 ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட 77 மூட்டைகள் அதிகமாக ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. கொப்பரை கிலோவுக்கு ரூ.1.51 விலை அதிகரித்து உள்ளது என ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com