கொரோனா பரவலால் கோடநாடு விசாரணை காலதாமதம்; ஜெயக்குமார் பேட்டி

கொரோனா பரவலால் கோடநாடு வழக்கு விசாரணை காலதாமதம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கொரோனா பரவலால் கோடநாடு விசாரணை காலதாமதம்; ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோடநாடு விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு வருடம் கோர்ட்டு செயல்படாமல் இருந்தது. அதனால், விசாரணை காலதாமதம் அடைந்தது.

கோடநாடு வழக்கு விவகாரம் பற்றி மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடந்தது. அவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 90 சதவீதம் விசாரணை நிறைவு என கூறினார். ஆனால், திடீரென வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏன் அவரை விட குறைவான பணியில் உள்ளவரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது?

குற்றவாளிகள் மீது, கொலை, கொள்ளை, திருட்டு, ஆட்கடத்தல் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் கொடுங்குற்றம் புரிந்தவர்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு, தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர்கள் அவர்களுக்காகவே வாதிட்டு உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் தரலாம் என கூறியுள்ளனர். இதனை முதல்-அமைச்சர் சட்டசபையில் நிரூபித்து உள்ளார்.

இவர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அதனாலேயே, இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சட்டசபையில் நமது எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் பேசியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com