மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கொத்தனார் கைது

விசாரணையில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்தவர் முருகேசன் (40 வயது). கொத்தனாரான இவர், சம்பவத்தன்று மனவளர்ச்சி குன்றிய 30 வயதான பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் வந்ததால் அங்கிருந்து முருகேசன் தப்பி ஓடி விட்டார்.

Also Read
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
கோப்புப்படம்

இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read
சென்னையில் நாளை மறுநாள் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com