கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்: விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு அறிவிப்பு

மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெற தகுதியுடையவராவர்.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்: விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு
Published on: 

சென்னை,

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்

மத நல்லிணக்கத்திற்காக் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீரின் பெயரால் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் காசோலை

ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்)க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெற தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

இணையதளம்

வரும் 26.01.2027 அன்று குடியரசு தின விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்திற்கு தகுதியானவரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு 15.12.2026-க்கு முன்பாக அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கௌரவிக்கப்படுவார்

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதல்-அமைச்சரால் 26.01.2027 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com