கோட்டயம் - பெங்களூரு சிறப்பு ரெயில்: திருப்பூர், சேலம் வழியாக இயக்கம்

பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06147) வருகிற 18ம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு பெங்களூரு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோட்டயம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06148) வருகிற 19ம் தேதி அன்று இரவு 10.20 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.50 மணிக்கு கோட்டயம் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரெயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு 16ம் தேதி (நாளை) மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






