கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
Published on

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே கொளாநல்லி கிராமத்தில் பூமிநீளா சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 113-வது ஆண்டாக திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி காலை 7.30 மணி அளவில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அனுக்ஞை, ஆச்சார்யார் வர்ணம், விஸ்வ ஷேனா ஆராதனம், புண்ணியா காவாசனம், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து யாக பூஜை, சாமி ஊஞ்சலில் எழுந்தருளல், கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மதியம் 3.30 மணி அளவில் மாலை மாற்றுதல், மாங்கல்ய பூஜை, மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அதன்பின்னர் சாமி தேங்காய் உருட்டி விளையாடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com