கோவில்பட்டி: ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தப்பட்ட கார் தீயில் கருகியது


கோவில்பட்டி: ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தப்பட்ட கார் தீயில் கருகியது
x

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சாத்தூர் மெயின் ரோட்டில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் சாத்தூர் மெயின் ரோட்டில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இந்த ஒர்க்‌ஷாப் அருகே உள்ள காலி இடத்தில் புற்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்த புற்கள் மீது நேற்று சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் புற்கள் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்து சுற்றிலும் பரவியது.

அப்போது இந்த ஒர்க்‌ஷாப்பில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த காரில் தீப்பற்றியது. இதில் கார் தீயில் கருகி முழுவதும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் எரிந்து சேதமடைந்த கார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுது பார்ப்பதற்காக குமாரின் ஒர்க்‌ஷாப்புக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என தெரியவந்தது. கார் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story