கோவில்பட்டி நகரசபை கூட்டம்

கோவில்பட்டி நகரசபை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி நகரசபை கூட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை சாதாரண கூட்டம் நடந்தது. நகரசபை தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் கமலா, துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தலைவர் பதிலளித்து கூறுகையில், நகரசபை சாலைகளில் மராமத்து பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். குடிநீர் பகிர்மானக் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்றவுடன், சாலை பணிகள் தொடங்கப்படும். ராமசாமி தாஸ் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிட திறப்பு விழாவின் போது அங்குள்ள உடற்பயிற்சி மையக் கூடமும் பயன்பாட்டுக்கு திறக்கப்படும், என்றார். தொடர்ந்து கூட்டத்தில் வைக்கப்பட்ட 27 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகரசபை செயற்பொறியாளர் சணல் குமார், உதவி பொறியாளர் சண்முகம், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ண ராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com