கோவில்பட்டி: டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து- 20 பேர் படுகாயம்

படுகாயம் அடைந்த பயணிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டி: டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து- 20 பேர் படுகாயம்
Published on

கோவில்பட்டி ,

கோவையில் இருந்து நேற்று தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை எற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்தது. இன்று கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் வந்தபோது சாலையில் நின்று கொண்டு இருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஒட்டுநர், 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 20 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஒட்டுனர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த சரவணன் இடிபாடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்த உடன் கோவில்பேட்டி தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுனரை மீட்டனர். காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக தேசிய நெடுசாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி கிழக்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com