

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்தது. குறிப்பாக காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிகிச்சை அளிக்கும் பகுதி, மருந்து வாங்கும் இடம், ஊசி போடும் இடத்தை சுற்றிலும் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். கோவில்பட்டியில் பெய்த கனமழையால் அண்ணா பஸ்நிலையம் முன்புள்ள மெயின் ரோட்டில் ஆறுபோல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில், கோவில்பட்டியில் 49 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பரில் மிக கனமழை பதிவாகி உள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவில்பட்டியில் 1977-ம் ஆண்டிற்கு பிறகு, அதாவது 49 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பரில் மிக கனமழை (120 மி.மீ மேல்) பதிவாகியுள்ளது. நவம்பர் மாத மழை வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச மழையையும் கோவில்பட்டி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10-11-1907 -கோவில்பட்டி -153.16 மி.மீ
23-11-1970 -கோவில்பட்டி - 140 மி.மீ
27-11-2026 - கோவில்பட்டி - 130 மி.மீ
09-11-1977 - கோவில்பட்டி - 123 மி.மீ
27-11-2011 - கோவில்பட்டி - 109 மி.மீ