கிருஷ்ண ஜெயந்தி விழா

சொக்கம்பட்டி அருகே வேட்டரம்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
கிருஷ்ண ஜெயந்தி விழா
Published on

கடையநல்லூர்:

சொக்கம்பட்டி அருகே வேட்டரம்பட்டியில் யாதவர் சமுதாயம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி சிறுவர்-சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. இரவில் யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமுதாய கொடியை ஏற்றி வைத்து கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கலந்து கொண்டனர். முன்னதாக அவர் சிங்கிலிபட்டி பூமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்து சமுதாய கொடியை ஏற்றி வைத்தார். இதில் புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை கண்ணன் மற்றும் யாதவர் சமுதாயம், யாதவர் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com