

கிருஷ்ணகிரி,
பெங்களூருவில் இருந்து இருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியின் ஓசூர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, படுகாயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. முதற்கட்ட விசாரணையில் தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.