கிருஷ்ணகிரி: மொபைல் கடைக்குள் புகுந்து ரூ.30,000 மதிப்பிலான செல்போன் திருட்டு

கடையின் உரிமையாளர் செல்போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி: மொபைல் கடைக்குள் புகுந்து ரூ.30,000 மதிப்பிலான செல்போன் திருட்டு.
திருட்டு
Published on: 

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில், மொபைல் கடை ஒன்றிற்குள் புகுந்து ரூ.30,000 மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.30,000 மதிப்பிலான போன் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள மொபைல் கடை ஒன்றிற்கு, இன்று (திங்கட்கிழமை) செல்போன் பழுதுபார்க்கும் வாடிக்கையாளர் போல மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் உரிமையாளரின் கவனக்குறைவை சாதகமாகப் பயன்படுத்திய அந்த நபர், சுற்றும் முற்றும் பார்த்து யாரும் கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த ரூ.30,000 மதிப்பிலான விலையுயர்ந்த செல்போனை நைசாகத் திருடி தனது பாக்கெட்டில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், ஒன்றும் தெரியாதது போல அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கடையின் உரிமையாளர் செல்போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், அந்த நபர் சுற்றிலும் பார்த்துவிட்டு மிக லாவகமாக செல்போனைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. "சுத்திமுத்தி பார்த்தான்.. எடுத்தான்.. போயிட்டான்..!" என்ற தலைப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தைக் கொண்டு மொபைல் திருடனை வலைவீசித் தேடி வருகின்றனர்.

X