கிருஷ்ணகிரி: இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதலை பிரித்ததால் சிறுமி தற்கொலை

ஓசூர் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
கிருஷ்ணகிரி: இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதலை பிரித்ததால் சிறுமி தற்கொலை
Published on

நாமக்கல்லை சேர்ந்த இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வயப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஏப்ரல் 8ம்தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடையாத நிலையில், பெற்றோருடன் செல்ல மறுத்த சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கடந்த 22-ம்தேதி சிறுமியை சமாதானம் செய்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதைக் கண்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com