கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 439 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com