கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
Published on

கிருஷ்ணகிரி,

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுறப் பாசன கால்வாய்களில் சுழற்சி முறையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 72.60 மில்லியன் கன அடி வீதம் மொத்தம் 457.58 மில்லியன் கன அடி தண்ணீர் சுழற்சி முறையில் 6 தவணைகளாக 26.02.2025 முதல் 26.05.2025 வரை மொத்தம் 90 நாட்களுக்கு இரண்டாம் போக விவசாய பாசனத்திற்கு கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 8000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com