கிருஷ்ணகிரி சரக விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணகிரியில் சரக விளையாட்டு போட்டிகள் நடந்தன.
கிருஷ்ணகிரி சரக விளையாட்டு போட்டிகள்
Published on

கிருஷ்ணகிரியில் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கோ-கோ விளையாட்டு போட்டியும், மாணவ, மாணவிகளுக்கு வளையப்பந்து ஒற்றையர், இரட்டையர், பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்தன. இந்த போட்டிகளை நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசைநாதன், விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்துறை தலைவர் ஜான்பிரிட்டோ, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் பசவராஜ், பெருமாள் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இதில், 14, 17, 19 வயது பிரிவில், கோ கோ, பூப்பந்தாட்டம் ஆகிய போட்டியில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். பூப்பந்தாட்டம் ஆண்கள் பிரிவில், 14, 19 வயது பிரிவில் கிருஷ்ணகிரி டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 17 வயது பிரிவில் விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com